Oct 18, 2025
Thisaigal NewsYouTube
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

Share:

இன்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதின.

டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.

திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.

குறிப்பாக சிவம் சிங் பந்துகளை சிக்சர்களாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

பூபதி குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த சிவம் சிங் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்.

அவரைத் தொடர்ந்து ஆதித்ய கணேஷ் 13 ரன்களிலும், சரத் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. சுபோத் 6 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Related News