Sep 21, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் களமிறங்கிய லின் யு-டிங்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று அசத்தல்!
விளையாட்டு

மீண்டும் களமிறங்கிய லின் யு-டிங்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று அசத்தல்!

Share:

பாலின சர்ச்சை காரணமாகப் பெரும் விவாதத்திற்கு உள்ளான தைவானின் ஒலிம்பிக் சாம்பியன் லின் யு-டிங், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சர்வதேசக் களத்திற்குத் திரும்பி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

மங்கோலியாவின் உலான்பாட்டர் நகரில் நடைபெற்ற 'ஆசிய குத்துச்சண்டை எலைட் சாம்பியன்ஷிப்' போட்டியில் அவர் இந்தப் சாதனையைப் படைத்துள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு அவர் பங்கேற்ற முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில் அவர் தனது வழக்கமான 57 கிலோ எடைப் பிரிவிலிருந்து 60 கிலோ எடைப் பிரிவிற்கு மாறியிருந்தார். அரையிறுதிப் போட்டியில் வட கொரியாவின் வோன் உன் கியோங்கிடம் போராடித் தோல்வியடைந்த நிலையில், அவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதியானது.

கடந்த மாதம் 'வேர்ல்ட் பாக்சிங்' அமைப்பு லின் யு-டிங் பெண்கள் பிரிவில் போட்டியிடத் தகுதியானவர் என உறுதி செய்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் களம் கண்டுள்ளார். "இது புதிய எடைப் பிரிவில் எங்களின் முதல் முயற்சி. எதிராளிகளின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது," என்று அவரது பயிற்சியாளர் செங் சூ-ச்சியாங் தெரிவித்தார். ஜப்பானின் நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வதே லின் யு-டிங்கின் அடுத்த இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News