பெல்ஜியம் கால்பந்து அணியின் முன்னணி வீரரான ஜெரமி டோகுவுக்கு, உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் அதே காலகட்டத்தில் தனது முதல் குழந்தை பிறக்கவிருப்பதால், அவர் ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளார். மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் 24 வயது விங்கரான ஜெரமி டோகுவின் மனைவி ஷிரீனுக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் குழந்தை பிறக்கவுள்ளது. அந்தச் சமயம் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதிப் போட்டிகள் நடைபெறும் காலமாகும். முதல் குழந்தை பிறக்கும் தருணத்தில் தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், அதே வேளையில் கால்பந்து கடமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பெல்ஜியம் கால்பந்து கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை போட்டி நடைபெறும் அமெரிக்காவில் இருந்து, குழந்தை பிறக்கும் இங்கிலாந்திற்குச் சென்று வர பெல்ஜியம் ஊடகங்கள் தரப்பில் தனி விமானம் ஏற்பாடு செய்யப்படலாம் என்றும், அதன் பின்னர் அவர் மீண்டும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட அமெரிக்கா திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு
உலகக் கோப்பை போட்டியா அல்லது முதல் குழந்தை பிறப்பா? பெல்ஜியம் வீரர் ஜெரமி டோகு எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல்
Related News

ஆசியான் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் பதக்கம் - கராத்தே பிரிவில் கே. தேவேந்திரனுக்கு வெண்கலப் பதக்கம்

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராக அப் கானி ஹசான் தேர்வு

பிரிட்டன் கார் பந்தயம்: அஜித்தை கட்டியணைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

எஃப்1 போட்டிக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த அமைச்சுகள், முகமைகளுக்கு உத்தரவு

சுக்பிட் 2026: பல்கலைக்கழகத்துக்காக தங்கம் வென்ற மலேசிய நட்சத்திர வீரர்!


