Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ராகான் மூடா கழகத்திற்காக 1.11 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது
விளையாட்டு

ராகான் மூடா கழகத்திற்காக 1.11 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

Share:

சுங்கை பட்டாணி, பிப்ரவரி.19-

நாடு முழுவதும் உள்ள ராகான் மூடா கழகங்களை மீண்டும் இயங்குவதற்காக 1.11 மில்லியன் ரிங்கிட் மானியம் ஒதுக்கப்பட்டிருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினருமான தௌஃபிக் ஜோஹாரி தெரிவித்தார்.

அண்மையில் கெடா சுங்கை பட்டாணி மைடின் பேரங்காடியில் நடைபெற்ற ராகான் மூடா கழகங்களைச் சந்திப்பு மற்றும் மேகா ராகான் மூடா நாள்காட்டி வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்ட தௌஃபிக் ஜோஹாரி மேற்கண்டவாறு அவரின் சிறப்புரையில் தெரிவித்தார். அனைத்துத் தொகுதிகளிலும் அமைந்துள்ள ராகான் மூடா கழங்கள் மீண்டும் செயல்படுவத்தற்காக ஒவ்வொரு கழகங்களுக்கும் தொடக்க மானியமாக வெ 5000.00 வழங்கப்படும் என்றார்.

மேலும், தௌஃபிக் ஜோஹாரி கூறுகையில், ராகான் மூடா கழகம் இளைஞர்களின் வாழ்கையை நல்வழிபடுத்தி, தேசிய உணர்வை வலுப்படுத்துவதற்கு ராகான் மூடா ஒரு தளமாக அமையும் என்றார் தௌஃபிக் ஜோஹாரி.

இளைஞர்கள் என்றாலே,எதிர்கால தலைவர்கள்தான் என்று கூறுவார்கள். அதற்காக இளைஞர்கள் அவர்களின் உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் 222 கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு நாடாளுமன்றத்தின் கீழ் ஒரு ராகான் மூடா கழகம் செயல்படும் என்றார். இந்த ராகான் மூடா கழகம் மீண்டும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் மற்றும் தொடர்ந்து நிகழ்ச்சிகளைச் செய்வதற்கு அரசாங்க மானியத்தை விண்ணப்பிக்க முன்வர வேண்டும் என்றார் தௌஃபிக் ஜோஹாரி.

இறுதியாக, மேகா ராகான் மூடா நாள்கட்டி திட்டம் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும் என்றார். அத்துடன் இந்நிகழ்விற்குப் பிறகு, ராகான் எக்ஸ்பிரெசி மற்றும் ரமலான் மாதத்தை முன்னிட்டு ராகான் மூடா ரமலான் நிகழ்ச்சிகளும் திட்டத்தில் இருப்பதாக அமைச்சர் தௌஃபிக் ஜோஹாரி குறிப்பிட்டார்.

Related News

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட்-மேன் சிட்டி மற்றும் பிஎஸ்ஜி-செலிசி மோதும் அதிரடி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட்-மேன் சிட்டி மற்றும் பிஎஸ்ஜி-செலிசி மோதும் அதிரடி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஜப்பானில் முதல்முறையாக ‘பேடல்’ விளையாட்டு அறிமுகம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஜப்பானில் முதல்முறையாக ‘பேடல்’ விளையாட்டு அறிமுகம்

தேசிய காற்பந்து சர்ச்சை: என்னை பலிகடாவாக்க உள்ளிருப்பவர்கள் முயற்சி - ஜோகூர் இளவரசர் TMJ பகிரங்க குற்றச்சாட்டு

தேசிய காற்பந்து சர்ச்சை: என்னை பலிகடாவாக்க உள்ளிருப்பவர்கள் முயற்சி - ஜோகூர் இளவரசர் TMJ பகிரங்க குற்றச்சாட்டு

மிலானோ-கோர்டினா பாராலிம்பிக்: கனடா அணி பதக்க வேட்டை

மிலானோ-கோர்டினா பாராலிம்பிக்: கனடா அணி பதக்க வேட்டை

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: 19 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பியர்லி - தீனா ஜோடி அரையிறுதியுடன் வெளியேற்றம்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: 19 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பியர்லி - தீனா ஜோடி அரையிறுதியுடன் வெளியேற்றம்

2026 ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி: 'ஸ்பீடி டைகர்ஸ்' அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டு

2026 ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி: 'ஸ்பீடி டைகர்ஸ்' அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டு