Jul 1, 2026
Thisaigal NewsYouTube
உலகிலேயே முதன்முறையாக பாட்மிண்டன் போட்டிகளில் செயற்கை நுண்ணறிவு மீளாய்வு முறை
விளையாட்டு

உலகிலேயே முதன்முறையாக பாட்மிண்டன் போட்டிகளில் செயற்கை நுண்ணறிவு மீளாய்வு முறை

Share:

உலகிலேயே முதன்முறையாக பேட்மிண்டன் விளையாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உடனடி மீளாய்வு முறை, பாட்மிண்டன் உலகக் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த ரிவீல்டெக் Sdn Bhd என்ற விளையாட்டு தொழில்நுட்ப நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

சிலாங்கூரில் நடைபெற்ற பெட்ரோனாஸ் தேசிய 18 வயதுக்குட்பட்டோர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம், பந்து கோட்டுக்குள் விழுகிறதா அல்லது வெளியே செல்கிறதா என்பதைச் சில நொடிகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் துல்லியமாகக் கண்டறிய முடியும். முடிவுகள் மைதானத்தில் உள்ள திரைகளில் உடனடியாகக் காண்பிக்கப்படுவதால் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் எளிதாகப் புரியும் வகையில் அமைந்துள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பம் அடித்தட்டுப் போட்டிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதன் மூலம், இளம் வீரர்களுக்குப் பன்னாட்டுப் போட்டிகளைப் போன்ற அனுபவம் கிடைப்பதுடன் செலவும் பெருமளவில் குறைகிறது

Related News

டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்திற்கு அதீத வெப்ப அலை பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்திற்கு அதீத வெப்ப அலை பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 ஹாலாண்டின் அதிரடி கோல்: நாக் அவுட் சுற்றில் வென்று நார்வே வரலாற்றுச் சாதனை!

ஹாலாண்டின் அதிரடி கோல்: நாக் அவுட் சுற்றில் வென்று நார்வே வரலாற்றுச் சாதனை!

ஜெர்மனி, நெதர்லாந்து அதிர்ச்சித் தோல்வி; உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் இன்று எம்பாப்பே, ஹாலண்ட் களம் காண்கின்றனர்!

ஜெர்மனி, நெதர்லாந்து அதிர்ச்சித் தோல்வி; உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் இன்று எம்பாப்பே, ஹாலண்ட் களம் காண்கின்றனர்!

பிரேசில் கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்ட வெற்றி; உலகக் கோப்பை 16ஆவது சுற்றுக்குத் தகுதி!

பிரேசில் கடைசி நிமிடத்தில் அதிர்ஷ்ட வெற்றி; உலகக் கோப்பை 16ஆவது சுற்றுக்குத் தகுதி!

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு