Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அர்ஜெண்டினா கால்பந்து அணியுடன் மோதும் வாய்ப்பை நிராகரித்த இந்தியா
விளையாட்டு

அர்ஜெண்டினா கால்பந்து அணியுடன் மோதும் வாய்ப்பை நிராகரித்த இந்தியா

Share:

இந்நிலையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, தெற்கு ஆசியாவில் இரு அணிகளுடன் நட்புறவாகச் சர்வதேச போட்டிகளில் விளையாட முடிவு செய்து அவற்றில் ஒரு ஆட்டத்தை இந்தியாவுடன் ஆட விரும்பி இருக்கிறது. இதற்காக அர்ஜெண்டினா கால்பந்து அமைப்பு அனைத்து இந்தியக் கால்பந்து அமைப்பை அணுகியுள்ளது. ஆனால் இந்தியக் கால்பந்து அமைப்பு இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்திருக்கிறது. இதுகுறித்து அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷஜி பிரபாகரன் விளக்கம் அளித்திருக்கிறார்.

அர்ஜெண்டினா அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் மிகப்பெரிய தொகை தேவை. அர்ஜெண்டினா அணிக்கான போட்டிக் கட்டணமும் ஏறக்குறைய 40 கோடி இருக்கும். அந்த அளவிற்கு அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பிடம் நிதி ஆதாரம் இல்லாததால் அவர்களுடன் விளையாடும் வாய்ப்பைத் தவிர்க்க வேண்டியதாயிற்று.

Related News