Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சர்ச்சை.. நடுவரின் தவறான முடிவு.. போட்டியிலிருந்து பாதியில் விலகிய கேரள அணி
விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சர்ச்சை.. நடுவரின் தவறான முடிவு.. போட்டியிலிருந்து பாதியில் விலகிய கேரள அணி

Share:

ஐ எஸ் எல் கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு, கேரளா அணிகள் மோதின பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

இந்த ஆட்டத்தில் 90 நிமிடம் முடிவில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதில் ஆட்டத்தில் 96 வது நிமிடத்தில் பெரும் சர்ச்சையான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதில் பெங்களூர் அணிக்கு பிரி கீக் வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

அப்போது வீரர்கள் யாரும் சரியாக லைனில் நிற்க கூட இல்லை. கேரளாவின் கோல் கீப்பர் அவர் இடத்திற்கு கூட செல்லவில்லை. அவ்வளவு ஏன் நடுவர் கூட விசில் அடிக்கவில்லை. ஆனால் அதற்குள் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் சுனில் செற்றி கோல் அடித்து விட்டார். இதற்கு நடுவரும் அனுமதி அளித்துவிட்டார் .

இதன் காரணமாக கடுப்பான கேரளா அணி வீரர்கள் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விதிகள் மீறி கோல் அடிக்கப்பட்டதாகவும், இது தவறு என்றும் இதனை அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் முறை விட்டனர்.

Related News