Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று புகழ்மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விளையாட்டு

ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று புகழ்மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Share:

ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று புகழ்மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இருப்பினும் முதல் இரு போட்டிகளில் நூலிழையில் மட்டுமே வெற்றி பறிபோனதால், அடுத்த இரு போட்டிகளில் வெற்றிபெற முடியும் என்று இங்கிலாந்து அணி காத்திருக்கிறது. குறிப்பாக 3வது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் அவுட் பந்துவீச்சு மிரட்டலாக இருந்ததால், இங்கிலாந்து அணியின் மீதும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

பேஸ் பால் ஆட்ட முறையால் வெற்றிபெற முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், ஆட்டத்தின் 5 நாட்களையும் சுவாரஸ்யமாக்க முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிரூபித்து காட்டியுள்ளார். இருப்பினும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் நடப்பு ஆஷஸ் தொடரில் திணறி வருகிறார். இதற்கு இங்கிலாந்து நிர்வாகம் தரப்பில் அமைக்கப்படும் பிளாட் பிட்ச்கள் காரணமாக அமைந்துள்ளது.

40 வயதை எட்டியுள்ளதால், ஆண்டர்சன் ஸ்விங்கை மட்டுமே நம்பி வீச வேண்டியுள்ளது. இளம் வீரர்களை போல் 140+ வேகத்தில் பந்துவீச முடியாமல் திணறி வருகிறார். இதனால் ஆண்டர்சனுக்கு இதுவே கடைசி ஆஷஸ் தொடராக இருக்கும் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். இதுவரை 181 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன், 688 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைப்பார்.

Related News