Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஜோகோவிச் மீண்டும் முதல் இடம்
விளையாட்டு

ஜோகோவிச் மீண்டும் முதல் இடம்

Share:

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 7,595 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்தின் அரியணையை பிடித்துள்ளார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் அரைஇறுதியில் கார்லஸ் அல்காரசையும், இறுதிசுற்றில் கேஸ்பர் ரூட்டையும் வீழ்த்தி 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்த ஜோகோவிச் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறார். 36 வயதான ஜோகோவிச் இந்த ஆண்டில் 3-வது முறையாக முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளார். கடைசியாக கடந்த மே மாதத்தில் முதலிடத்தில் இருந்த ஜோகோவிச் நம்பர் ஒன் வீரராக 388-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

Related News