Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஹரிமாவ் மலாயா பாரம்பரிய வீரர்களுக்கு எதிராக ஃபிபாவிடம் புகாரா? - இந்தோனேசிய அமைச்சர் மறுப்பு
விளையாட்டு

ஹரிமாவ் மலாயா பாரம்பரிய வீரர்களுக்கு எதிராக ஃபிபாவிடம் புகாரா? - இந்தோனேசிய அமைச்சர் மறுப்பு

Share:

ஜகார்த்தா, பிப்ரவரி.21-

மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் 7 வெளிநாட்டு பாரம்பரிய ஆட்டக்காரர்களின் தகுதி நிலவரம் குறித்து அனைத்துலக கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவிடம் புகார் அளித்ததாக வெளிவந்த தகவலை இந்தோனேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எரிக் தொஹிர் மறுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக, ஃபிஃபாவை அணுகியதாக மலேசிய செய்தி இணையதளம் ஒன்றில் வெளியான செய்திக்கு பதிலளித்த, இந்தோனேசிய கால்பந்து சங்கத்தின் தலைவருமான எரிக், அத்தகைய நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பிற நாட்டு விவகாரங்களில், தான் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள எரிக், அச்செய்தி முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகளிடையே அதிக போட்டியை ஊக்குவிக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நமது கால்பந்து அணி மேம்படவில்லை என்றால், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க அணிகளிடம் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருப்போம் என்றும் எரிக் தெரிவித்துள்ளார்.

Related News

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட்-மேன் சிட்டி மற்றும் பிஎஸ்ஜி-செலிசி மோதும் அதிரடி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட்-மேன் சிட்டி மற்றும் பிஎஸ்ஜி-செலிசி மோதும் அதிரடி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஜப்பானில் முதல்முறையாக ‘பேடல்’ விளையாட்டு அறிமுகம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஜப்பானில் முதல்முறையாக ‘பேடல்’ விளையாட்டு அறிமுகம்

தேசிய காற்பந்து சர்ச்சை: என்னை பலிகடாவாக்க உள்ளிருப்பவர்கள் முயற்சி - ஜோகூர் இளவரசர் TMJ பகிரங்க குற்றச்சாட்டு

தேசிய காற்பந்து சர்ச்சை: என்னை பலிகடாவாக்க உள்ளிருப்பவர்கள் முயற்சி - ஜோகூர் இளவரசர் TMJ பகிரங்க குற்றச்சாட்டு

மிலானோ-கோர்டினா பாராலிம்பிக்: கனடா அணி பதக்க வேட்டை

மிலானோ-கோர்டினா பாராலிம்பிக்: கனடா அணி பதக்க வேட்டை

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: 19 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பியர்லி - தீனா ஜோடி அரையிறுதியுடன் வெளியேற்றம்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: 19 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பியர்லி - தீனா ஜோடி அரையிறுதியுடன் வெளியேற்றம்

2026 ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி: 'ஸ்பீடி டைகர்ஸ்' அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டு

2026 ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி: 'ஸ்பீடி டைகர்ஸ்' அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டு