Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அயர்லாந்து டி20 தொடர்.. ரிங்கு சிங் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்.. உறுதியாக சொன்ன பிசிசிஐ அதிகாரி!
விளையாட்டு

அயர்லாந்து டி20 தொடர்.. ரிங்கு சிங் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்.. உறுதியாக சொன்ன பிசிசிஐ அதிகாரி!

Share:

அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், நடராஜன் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், நடராஜன் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்

குறிப்பாக ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் 450 ரன்களுக்கு மேலாக ரன்கள் சேர்த்தும் டி20 அணிக்கு தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் முறையாக செய்யப்பட்ட அணித் தேர்விலேயே அஜித் அகர்கர் சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்து வீரர்களையும் ஒரே தொடரில் களமிறக்க தேர்வுக் குழுவினர் விரும்பவில்லை. இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் 7 வீரர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடப் போவதில்லை.

Related News

அயர்லாந்து டி20 தொடர்.. ரிங்கு சிங் நிச்சயம் தேர்வு செய்ய... | Thisaigal News