ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய், சீன வீரர் வெங் ஹாங் யாங் ஆகியோர் மோதினர்.
முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்டு விளையாடிய பிரனாய் 23-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தனதாக்கினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை வெங் ஹாங் யாங் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார். அத்துடன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

Related News

அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது பாரா ஆசியான் போட்டி

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி: இந்தோனேசிய வீராங்கனை வெற்றி

இந்திய பொது பூப்பந்து போட்டி: பெர்லி டான்-எம். தீனா தோல்வி

மான்செஸ்டர் யுனைடெட் இடைக்கால நிர்வாகியாக மைக்கேல் கேரிக்

வயது குறைந்த பையனிடம் பாலியல் பலாத்காரம், கால்பந்து பயிற்றுநர் கைது


