ஜகார்த்தா, ஜனவரி.25-
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்தாட்டப் போட்டியில், மலேசியாவின் கலப்பு இரட்டையர் அணியும் மகளிர் இரட்டையர் அணியும் சாம்பியன் பட்டம் வென்று இரட்டை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன.

கலப்பு இரட்டையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்திலுள்ள Chen Tang Jie-Toh Ee Wei இணை, டென்மார்க்கின் Mathias Christiansen-Alexandra Boje இணையை 15 க்கு 21, 21 க்கு 17, 21 க்கு 11 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 2010-இல் இப்போட்டித் தொடர் தொடங்கப்பட்ட பிறகு, இதில் பட்டம் வெல்லும் முதல் மலேசிய கலப்பு இரட்டையர் இணை இவர்களே ஆகும்.
மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் இணையான Pearly Tan-M Thinaah ஜோடி, 15 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் இவர்களை எதிர்கொள்ளவிருந்த ஜப்பானிய வீராங்கனை ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ஜப்பானிய இணை போட்டியிலிருந்து விலகியது. இதன் விளைவாக பெர்லி - தீனா இணைக்கு வெற்றி அறிவிக்கப்பட்டது.








