இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 356 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது. இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் பல்வேறு மோசமான சாதனைகளில் இடம் பிடித்துள்ளது.
இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் நான்காவது ஆகும். 2023-ல் இலங்கைக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2007-ல் பெர்முடாவிற்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்திலும், 2008-ல் ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்திய 2-வது அணி இந்தியா ஆகும். 2009-ல் இலங்கை 234 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. 2002-ல் ஆஸ்திரேலியா 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 1992ல் இங்கிலாந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
ஆசிய கோப்பையில் மிகப்பெரிய வித்தியாசத்தில் இது நான்காவது வெற்றியாகும். 2009-ல் இந்தியா ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2023-ல் நேபாளத்திற்கு எதிராக பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2000-ல் வங்காள தேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.