Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய் / பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை
உலகச் செய்திகள்

ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய் / பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை

Share:

தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று பிற்பகல் கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இச்சந்திப்பின் போது, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தவெக நிர்வாகிகள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட, தவெக கட்சிக்கு இன்னும் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், கூட்டணியமைக்க முன்வந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவுக் கடிதத்தை விஜயிடம் வழங்கினர்.

அதன் படி, தவெக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 113 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதர கட்சிகளிடம், 5 சட்டமன்ற உறுப்பினர்களிடன் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாளை, மே 7 ஆம் தேதி வியாழக்கிழமை, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில், தமிழகத்தின் 32-வது முதலமைச்சராகவும், தனிநபர் அடிப்படையில் 9-வது முதலமைச்சராகவும் தளபதி விஜய் பதவியேற்கிறார்.

தமிழக அரசு தரப்பில் பதவியேற்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை