ஹிஜாப்புக்கு எதிரான போராட்ட்த்தின் உச்சகட்டமாக ஈரான் அரசு டிவியின் நேரடி ஒளிபர்ப்பை போராட்டக்காரர்கள் சில நிமிடங்கள் முடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் உடையை அணிவது ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆடையை முறையாக அணியவில்லை எனக் கூறி, மாஷா அமினி என்ற 22 வயது பெண்ணை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தார். கடந்த மாதம் தலைநகர் தெஹ்ரானில் நிகழ்ந்த இக்கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.இளம் பெண்ணின் மரணத்தையடுத்து ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர. அவர்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவி்த்து வருகின்றன. அவற்றி்ல் ஒரு அமைப்பான ஈடலட் இ அலி என்ற அமைப்பு அரசுக்கு எதிரான தங்களது கோபத்தை வித்தியாசமான முறையில் வெளிபப்டுத்தி உள்ளனர். ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி நேற்றிரவு பங்கேற்ற கூட்டம் அரசு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது ஈடலட் இ அலி சில நிமிடங்கள் டிவி ஒவிபரப்பை முடக்கினர். அத்துடன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அமினியின் படத்தையும், போராட்டத்தில் உயிரிழந்த 3 பெண்களின் படங்களும் சில நிமிடங்கள் திரையில் காட்டப்பட்டன.

Related News

இந்தோனேசியாவில் எரிமலை குமுறியது

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்: பின் தங்கியது அமெரிக்கா

இந்தோனேசியாவில் செம்பனை எண்ணெயுடன் வந்த கப்பலில் தீ: 10 பேர் பலி

வங்காளதேசத்தில் ரசாயனக் கிடங்கில் தீ: 16 பேர் உயிரிழந்தனர்

ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் மரணம்
