Sep 13, 2026
Thisaigal NewsYouTube
மேற்காசிய போர் தீவிரம்: இந்தியாவில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடல்
உலகச் செய்திகள்

மேற்காசிய போர் தீவிரம்: இந்தியாவில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடல்

Share:

புதுடில்லி, மார்ச்.10-

மேற்காசியாவில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று முதல் உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோயம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதால், விரைவில் தமிழகத்திலும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்காசிய போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிபொருள்கள் விநியோகமானது கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தடைபட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

உலகச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடானது, இந்தியச் சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவுக்குத் தேவையான பெரும்பாலான கச்சா எண்ணெய் வளைகுடாவில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை