கனடா நாட்டில் பிரம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றின்போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் செய்து, வைக்கப்பட்டிருந்த வீடியோ காட்சி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலையை ஆதரிப்பது போன்று கனடாவில் ஒரு கண்காட்சி அணிவகுப்பு நடைபெற்றது. அதில், ரத்தக் காயங்களுடன் இந்திரா காந்தி சிலை வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதர் கேமரான் மெக்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.