Sep 13, 2026
Thisaigal NewsYouTube
 தமிழகத்தின் 32-வது முதலமைச்சர் தளபதி விஜய்! இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார்
உலகச் செய்திகள்

தமிழகத்தின் 32-வது முதலமைச்சர் தளபதி விஜய்! இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார்

Share:

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தமாக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள 'தமிழக வெற்றி கழக'த் தலைவர் தளபதி விஜய், நாளை தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தனது முதல் அதிகாரப்பூர்வ அடியை இன்று எடுத்து வைக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட, திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்குத் தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளன. ஆதரவு வழங்கும் கட்சிகளின் அதிகாரப்பூர்வ கடிதங்களுடன், இன்று புதன்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லெக்கரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

நாளை, மே 7 ஆம் தேதி வியாழக்கிழமை, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில், தமிழகத்தின் 32-வது முதலமைச்சராகவும், தனிநபர் அடிப்படையில் 9-வது முதலமைச்சராகவும் தளபதி விஜய் பதவியேற்கிறார்.

கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு நனவாகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடத் தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மக்கள் முதல்வராக அரியணையில் அமரவிருக்கும் விஜய்க்குத் திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை