குவாந்தான், மே.05-
சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியென் லூங், தனது அதிகாரப்பூர்வ பகாங் மாநில பயணத்தை, நேற்று தெமர்லோ, லஞ்சாங் பகுதியில் உள்ள மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்டுத் தொடங்கினார்.
இது குறித்து பகாங் மாநில முதலீடு, தொழில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைத்துறை குழுத் தலைவர் டத்தோ முஹமட் நிஸார் நஜீப் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், லீ சியென் லூங் தலைமையிலான 41 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, அம்மையத்தில் வரவேற்றதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், லீ சியென் லூங் -இன் இப்பயணமானது, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளையும், குறிப்பாக மலேசியாவின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான மலாயன் புலிகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.








