Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஆட்சியமைக்க இன்னும் 10 தொகுதிகள் தேவை – என்ன செய்யப் போகிறது தவெக?
உலகச் செய்திகள்

ஆட்சியமைக்க இன்னும் 10 தொகுதிகள் தேவை – என்ன செய்யப் போகிறது தவெக?

Share:

தமிழகம், மே.05-

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்று முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது, நேற்று காலை முதல் இரவு வரை நீடித்து அதிகாரப்பூர்வத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தேர்தல் முடிவுகளின்படி,108 தொகுதிகளில் வென்று, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கிறது.

இருப்பினும், ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்ற சூழலில், அக்கட்சிக்கு 10 தொகுதிகள் குறைவாக உள்ளன.

இந்நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் முதலில் அழைப்பு விடுப்பார் என அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 59 தொகுதிகளை வென்றுள்ள திமுக- உடனோ, 47 தொகுதிகளை வென்றுள்ள அதிமுகவுடனோ அல்லது இதர கட்சிகளுடனோ கூட்டணி அமைக்க இயலாத சூழலில் 10 தொகுதிகளை நிரப்ப தவெக என்ன செய்யப் போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆதரவு பெறாமல் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை என்பதால், அடுத்த சில மணி நேரங்களில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை