Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கைதாகிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்?
உலகச் செய்திகள்

கைதாகிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்?

Share:

பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் தெஹ்ரிக் இ-இன் சாப் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் பிரதமரானார். இதனிடையே, பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன.இதையடுத்து, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதன்படி, நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன் சாப் அரசு கவிழ்ந்தது. அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து, நாடு முழுவதும் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தி ஆளும் கட்சியை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகளின் சதியால் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

கைதாகிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்? | Thisaigal News