Sep 13, 2026
Thisaigal NewsYouTube
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; 3-வது முறையாக சாம்பியன் பட்டம்!
உலகச் செய்திகள்

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; 3-வது முறையாக சாம்பியன் பட்டம்!

Share:

அகமதாபாத், மார்ச் 9, 2026 – அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தங்களது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட (Defending Champions) முதல் அணி மற்றும் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற இரட்டை வரலாற்றை இந்தியா படைத்துள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவருக்குப் பக்கபலமாக அபிஷேக் சர்மா (52) மற்றும் இஷான் கிஷான் (54) ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். இறுதி ஓவர்களில் சிவம் துபே அதிரடியாக விளையாடி 26 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இது டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் பதிவான அதிகபட்ச ரன்களாகும்.

256 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சீஃபர்ட் (52) மட்டுமே ஓரளவுக்குப் போராடினார். இந்தியாவின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்தின் வெற்றியை முடக்கினார். அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அவருக்குப் பக்கபலமாக இருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

விருதுகள்:

  • ஆட்டநாயகன் (Player of the Match): ஜஸ்பிரித் பும்ரா

  • தொடர் நாயகன் (Player of the Tournament): சஞ்சு சாம்சன்

இந்த வெற்றியின் மூலம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி உலக கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. மைதானத்தில் திரண்டிருந்த சுமார் 86,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த வரலாற்று வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை