ஜி 20 மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் பலர் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்தியா வருகிறார். ஆனால், அவருடன் அவரின் பெரும் பாதுகாப்பு படையும் இந்தியா வருகிறது.
அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குறித்து ஹாலிவுட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் சினிமா எடுக்குமளவுக்கு வலுவான பாதுகாப்பு அரணை கொண்டவர் அமெரிக்க அதிபர்.
தெ யுனைட்டெட் ஸ்தேட்ஸ் சிக்ரேட் செர்விஸ் என்ற அமெரிக்காவின் ரகசிய சேவை அமைப்பு அதிபரின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1865ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டிருந்தாலும், 1901ஆம் ஆண்டில்தான் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு பணி இந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.