Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்: கத்தார், பஹ்ரைன், குவைத்தில் அவசரக்கால எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பு
உலகச் செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்: கத்தார், பஹ்ரைன், குவைத்தில் அவசரக்கால எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பு

Share:

ஈரானின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் உள்ள பல இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் நேற்று இரவு புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தின. ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு ஈரான் அச்சுறுத்தலாக விளங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியம் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, கத்தார் நாட்டின் உள்நாட்டு அமைச்சு தங்களது நாட்டு மக்களுக்கும் அங்கு வாழும் வெளிநாட்டினருக்கும் அவசரக்காலப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவு அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ தங்கியிருக்குமாறும், அதிகாரப்பூர்வ நிருவாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலும் அவசரக்கால எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் அமைதிகாத்து, தங்களுக்கு அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்தந்த நாட்டு நிருவாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

Related News