2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் கலை, இலக்கியம், பொது சேவை, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பானவர்களைத் தேர்வு செய்து பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகிறது.
இன்று அறிவிக்கப்பட்ட விருதுகளில் நடிகர்கள் பலருக்கும் விருதுகள் கிடைத்து இருக்கிறது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. மறைந்த ஹிந்தி நடிகர் தர்மேந்திராவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் மாதவனுக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.








