சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினி இனி படங்களில் நடிக்கமாட்டார் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. படத்தில் நடிக்கும் நடிகர்கள், படத்தில் இருந்து வெளியான பாடல்கள் என அனைத்தும் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
குறிப்பாக இப்படத்தில் இருந்து வெளியான ஹுக்கும் என்ற பாடல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் தான் இந்த சலசலப்பிற்கு காரணமாகும். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றார்.
இதையடுத்து ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்திலும் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படம் ரஜினியின் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான படமாக இருக்கும் என தகவல்கள் வருகின்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரஜினி தன் 171 ஆவது திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வருகின்றன.
2 படத்தை தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ரஜினியின் தலைவர் 171 திரைப்படத்தை தான் லோகேஷ் அடுத்ததாக இயக்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன. மேலும் இத்தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியும் இருக்கின்றது.
பொதுவாக ரஜினி மல்டி ஸ்டாரர் படங்களில் நடிக்கமாட்டார். ஆனால் ஜெயிலர் படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கின்றார் ரஜினி. எனவே தற்போது இருக்கும் ட்ரெண்டிற்கு ஏற்ப ரஜினி மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்து வரும் நிலையில் தலைவர் 171 படத்தில் 15 ஹீரோக்களுடன் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் தலைவர் 171 திரைப்படம் ரஜினியின் படமாக தான் இருக்குமாம். ஆனால் இந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது