நடிகர்கள் அனைவருக்குமே தங்களது திரைப் பயணத்தில் 25, 50, 75, 100வது படங்கள் எல்லாம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
அந்த எண் படங்களில் மிகவும் நல்ல கதையாக, சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லோரும் யோசிப்பது போல் இல்லாமல் தனது 50வது படத்தில் வில்லனாக நடித்து கெத்து காட்டியவர் தான் நடிகர் அஜித்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் தான் மங்காத்தா.
அஜித்தின் 50வது படமாக தயாரான இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க அர்ஜுன், ராய் லக்ஷ்மி, ஆண்ட்ரியா, அஷ்வின், வைபவ், பிரேம்ஜி, மஹத், ஜெயபிரகாஷ், அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு என பலர் நடித்திருந்தனர்.
கதையே சிறப்பாக இருக்க அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. தற்போது படம் மீண்டும் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் உற்சாகமாக படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு விஷயம் கூறியுள்ளார். அதாவது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுனுக்கு முன் நடிக்க வைக்க வெங்கட் பிரபு நாகர்ஜுனாவிடம் தான் கேட்டுள்ளார்.
ஆனால் தேதி மற்றும் சம்பளப் பிரச்சனையால் அவர் நடிக்க முன்வரவில்லையாம். பிறகே அர்ஜுன் நடித்துள்ளார்.








