உதயநிதிநின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்துள்ளது. உதயநிதி நாயகனான நடிக்க அவருக்கு நிகரான ரோலில் வைகைப்புயல் வடிவேலு நடித்திருந்தார்.இதுவரை ரசிகர்களால் நகைச்சுவை நடிகராக பார்க்கப்பட்ட வடிவேலு இப்படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை மாமன்னன் படத்தின் மூலம் உரக்க கூறியுள்ளார் வடிவேலு. இதையடுத்து ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஆகியோர் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மாமன்னன் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
குறிப்பாக ஏ.ஆர் ரஹ்மானின் இசை மாமன்னன் படத்திற்கு பக்கபலமாக இருந்தது. இந்நிலையில் மாரி செல்வராஜின் படங்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்று ரசிகர்களை ரசிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இப்படம் தன்னுடைய கடைசி படம் என்பதால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சினிமாவில் இருந்து விடைபெற வேண்டும் என எண்ணியிருந்தார் உதயநிதி.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் உதயநிதி செய்த ஒரு செயல் தான் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது. அதாவது மாமன்னன் படத்தில் வடிவேலு பெயரை முதலில் போட்டுவிட்டு தன் பெயரை கடைசியாக உதயநிதி போடச்சொன்னது தான் பெரும் பாராட்டை பெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாமல் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பெயருக்கு பின்னால் தான் தன் பெயர் இருக்க வேண்டும் என இயக்குனரிடம் கூறியுள்ளார் உதயநிதி.
முதலில் இயக்குனர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் உதயநிதியின் வறுபுறுத்தலின் பெயரில் மாரி செல்வராஜும் டைட்டிலில் கடைசியாக உதயநிதியின் பெயரை போட ஒப்புக்கொண்டார்.
பொதுவாக ஒரு ஹீரோ இவ்வாறு நடந்துகொள்வது தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே ஆச்சர்யமான விஷயமாகும். அதுவும் அவரின் கடைசி படம் என்பதால் அனைவரது கவனமும் தன் மீது தான் இருக்க வேண்டும் என எண்ணாமல் உதயநிதி இவ்வாறு செய்தது அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.