Oct 18, 2025
Thisaigal NewsYouTube
தோல்விக்கு நான் பொறுப்பேற்பேன்.. நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
சினிமா

தோல்விக்கு நான் பொறுப்பேற்பேன்.. நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

Share:

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சிவகார்த்திகேயன், "பொதுவாக படத்தின் ரிலீஸ் பற்றிய பதற்றம் இருக்கும், ஆனால் இந்த படத்தை உங்களுக்கு காட்ட வேண்டும் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது. மடோன் அஸ்வின் படத்தில் சமூக அக்கறையும், சமூக பார்வையும் இருக்கும். இதனை அனைவரும் விரும்பும் வகையில் கொடுப்பார்.

இந்த படத்திலும் அவரின் சமூக அக்கறை இருக்கிறது. பார்வையாளர்களிடம் கருத்து சொல்லும் வசனங்கள் படத்தில் இல்லை. ஆனால், படம் பார்த்து முடித்த பிறகு அந்த கருத்து மக்களிடம் போய் சேர்ந்திருக்கும். மிஷ்கின் சாரின் படங்கள் என்னுடைய ஃபேவரைட். அவர் ஸ்ட்ரிக்டான ஆள் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் ரொம்ப ஸ்வீட். போன படம் சறுக்கிவிட்டது. பொதுவாக தோல்விகளுக்கு மட்டும் நான் பொறுப்பேற்றுகொள்வேன். வெற்றி என்பது மொத்த குழுவின் உழைப்பால் கிடைப்பது" என்றார்.

Related News