Sep 27, 2026
Thisaigal NewsYouTube
இசைக்குயில் ஆஷா போஸ்லே மறைவு: இந்தியத் திரையுலகம் ஆழ்ந்த இரங்கல்
சினிமா

இசைக்குயில் ஆஷா போஸ்லே மறைவு: இந்தியத் திரையுலகம் ஆழ்ந்த இரங்கல்

Share:

மும்பை, ஏப்ரல்.11-

இந்தியத் திரையுலகின் புகழ் பெற்ற மூத்த பாடகி ஆஷா போஸ்லே, மாரடைப்பு, வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாகத் தனது 92-வது வயதில் மும்பையில் காலமானார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி சாதனை படைத்த இவர், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து மறக்க முடியாத பல பாடல்களை வழங்கியுள்ளார்.

மறைந்த பாடகியின் இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை மாலை சிவாஜி பார்க் மயானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மறைவு இந்திய இசைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

Related News