Sep 23, 2026
Thisaigal NewsYouTube
10 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது கோலிவுட் - தமிழக முதலமைச்சர் விஜய் பாராட்டு
சினிமா

10 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது கோலிவுட் - தமிழக முதலமைச்சர் விஜய் பாராட்டு

Share:

தமிழகம், ஜூலை.19-

இந்திய சினிமாவில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் தேசிய திரைப்பட விருதுகளில், இவ்வாண்டு கோலிவுட் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளன.

ராயன், அமரன், கேப்டன் மில்லர், மகாராஜா உள்ளிட்ட படங்கள் முக்கிய விருதுகளை பெற்றுள்ளன.

இயக்குனர் தனுஷின் ராயன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

அதேவேளையில், அமரன் திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குனருக்கான விருதையும், ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெற்றுள்ளனர்.

மேலும், மகாராஜா திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதும், அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாசுக்குச் சிறந்த துணை நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெய்யழகன் திரைப்படத்திற்காக சுரேன் ஜிக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், ப்ளூ குறும்படத்திற்காக டி.எஸ். ஹரிஹர சுதனுக்குச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் இந்த பெருமைமிக்க சாதனைக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

Related News