Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ரஜினிக்கு நான் நண்பன்.. "அவருக்கு தான் வில்லன்" - லோக்கியின் பிளானை வெளியிட்ட "உயர்ந்த மனிதன்"
சினிமா

ரஜினிக்கு நான் நண்பன்.. "அவருக்கு தான் வில்லன்" - லோக்கியின் பிளானை வெளியிட்ட "உயர்ந்த மனிதன்"

Share:

இந்தியா, மே 28-

வேட்டையன் பட பணிகளை முடித்துள்ள பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனது அடுத்த பட பணிகளை துவங்கவுள்ளார்.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவான "ஜெய்லர்" திரைப்படம், உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த பட பணிகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொடங்கினார். பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் "வேட்டையன்" என்கின்ற அந்த திரைப்படத்தில் அவர் தற்பொழுது நடித்து முடித்துள்ளார்.

மேலும் சில காலம் அமீரகத்தில் ஓய்வெடுத்த அவர், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ள தனது கூலி திரைப்பட பணிகளை விரைவில் துவங்க உள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் நடிக்கப் போகும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றது அனைவரும் அறிந்ததே.

அதன்படி தமிழ் சினிமாவில் மிக மூத்த நடிகரான சத்யராஜ் இந்த கூலி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்று நடிக்க உள்ளார். இது குறித்து பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான சித்ரா லக்ஷ்மணன் சிலர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தன்னிடம் சத்யராஜ் கூறிய தகவல்களை சொன்ன அவர், பலரும் நான் கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிப்பதாக எழுதி வருகிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல, இந்த திரைப்படத்தில் நான் அவருக்கு நண்பனாக நடிக்கின்றேன்" என்று கூறியுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு ரஜினி மற்றும் சத்யராஜ் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், சுமார் 38 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

மேலும் சத்யராஜ் அளித்த தகவலின்படி, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்க உள்ள சல்மான் கான் திரைப்படத்தில் தான், நான் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளேன் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார் அவர்.

Related News

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு