Sep 23, 2026
Thisaigal NewsYouTube
வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து
சினிமா

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

Share:

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் தேர்வு தொடர்பான விவகாரங்களை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களும் மாணவர்களும் நடத்தி வரும் போராட்டங்களுக்குத் தொடக்கம் முதலே ஆதரவளித்து வரும் அவர், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

"வாழ்த்துகள் எனது அன்பான கரப்பான் பூச்சிகளே... இளைஞர்களின் பக்கம் நின்ற சோனம் வாங்சுக் மற்றும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள். ஒரு ஆட்சியை முழங்காலிட வைக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்" என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News