Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்
சினிமா

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

Share:

72வது தேசிய திரைப்பட விருதுகளில் 'ராயன்' படத்திற்குச் சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டதும், சமூக வலைதளங்களில் அதற்குக் கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தன. பல திறமையான படங்களும் நடிகர்களும் விடுபட்டுவிட்டதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், நடிகர் தனுஷ் இது குறித்துப் பொது மேடையில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அந்த ஆண்டில் 'ராயன்' படத்தை விடச் சிறந்த பல திரைப்படங்கள் வெளியாகி இருந்ததாகத் தெரிவித்த தனுஷ், அந்தப் படங்களை ஆதரித்த ரசிகர்களின் உணர்வுகளைத் தான் முழுமையாகப் புரிந்துகொண்டு மதிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், தனது முந்தைய பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாகப் பாராட்டுப் பெற்ற போதிலும் தேசிய விருதுகளைப் பெறவில்லை என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.

எந்தவொரு விருதையும் எதிர்பார்ப்புகளால் மட்டும் பெற்றுவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், சில விஷயங்கள் எவ்வித முயற்சியும் இன்றித் தாமாகவே கனிந்துவரும் என்றார். தமிழனாகத் தனக்குக் கிடைக்கும் இந்த இரண்டு தேசிய விருதுகளைக் குறைத்து மதிப்பிடாமல், ரசிகர்கள் அனைவரும் அதைக் கொண்டாட வேண்டும் என்றும் தனுஷ் கேட்டுக் கொண்டார்.

Related News