பெய்ஜிங், ஜனவரி.16-
உலகப் புகழ் பெற்ற நடிகரான ஜாக்கி சான், தனது மரணத்திற்குப் பின்னால் வெளியிடப்படக்கூடிய வகையில், பிரியாவிடைப் பாடல் ஒன்றைத் தயாரித்துள்ளார்.
71 வயதான அவர், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாக, முதுமை குறித்தும், மரணம் குறித்தும் சிந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜாக்கி சான், தொடர்ச்சியாக நிகழ்ந்தும் வரும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மரணங்களே தனக்கு இப்படி ஒரு சிந்தனையைத் தூண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தனக்கு எப்படி இறப்பு ஏற்படும் என அடிக்கடி யோசிப்பதாகவும், ஏதாவது சாகசங்கள் செய்யும் போது இறக்க நேரிடலாம் என்றும், அத்திரைப்பட விழாவில் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாக்கி சான் தனது நெருங்கிய நண்பர்கள் பலரை இழந்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.








