சமீபத்தில் தமன்னா, மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பொழுது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். அப்பொழுது ரசிகர் ஒருவர் தமன்னாவின் காலில் விழுந்தார். பின்னர் தமன்னாவுக்கு பூங்கொத்து கொடுத்த அந்த ரசிகர், தனது கையில் தமன்னாவின் முகத்தை பச்சை குத்தியிருந்ததை காண்பித்தார். ரசிகரின் அன்பை நெகிழ்ந்து பார்த்த தமன்னா, கண்கலங்கி அவரை கட்டியணைத்தார். மேலும் அவர் கொடுத்த பூங்கொத்து மற்றும் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
