மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஃபஹத் ஃபாசில். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வருகின்றார் ஃபஹத் ஃபாசில். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என இல்லாமல் அனைத்து கதாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகின்றார் ஃபஹத் ஃபாசில்.
ஃபஹத் ஃபாசில் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. ஏனென்றால் ஃபஹத் ஃபாசில் என்னதான் ஒரு மலையாள நடிகராக இருந்தாலும் அவரின் தமிழ் உச்சரிப்புகள் மிகவும் சிறப்பாக இருந்தது. மிகவும் நேர்த்தியாக நடித்த ஃபஹத் ஃபாசி லை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ரத்னவேல் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் ஃபஹத் ஃபாசில் என ரசிகர்கள் ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மாமன்னன் படத்திற்காக ஃபஹத் ஃபாசில் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக ஃபஹத் ஃபாசில் 3 கோடிவரை சம்பளமாக வாங்கியிருக்கிறார் என தகவல் வந்துள்ளது.
இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு முன்னணி நடிகர் அதுவும் பான் இந்திய படங்களில் நடித்து வரும் நடிகரான ஃபஹத் ஃபாசில் 3 கோடி மட்டும் தான் சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.