நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என அறிமுகமானாலும் ஒரு வெற்றி காண மிகவும் கஷ்டப்பட்டார்.
தன்னை தனியாக அடையாளப்படுத்த வேண்டும் என தனது நடிப்பை மாற்றினார். சிக்கிக் பேக் வைத்து எல்லோரையும் அசத்தி அதிக கவனம் பெற்றார். கடைசியாக இவரது நடிப்பில் கடந்த வருடம் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி இருந்தது.
அப்படம் சூர்யாவிற்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. அடுத்து சூர்யா நடிப்பில் கருப்பு திரைப்படம் வெளியாக உள்ளது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
கருப்பு பட வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்க சூர்யா தனது 50வது படத்திற்கான வேலைகளை ஒருபக்கம் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சூர்யாவின் 50வது படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும், அந்த படத்தை பைசன் காளமாடன் என்ற ஹிட் படத்தை லேட்டஸ்ட்டாக கொடுத்த மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.








