Oct 18, 2025
Thisaigal NewsYouTube
எனக்கு அனைத்தையும் கொடுத்த படம் இது.. 'காக்க காக்க' குறித்து சூர்யா பதிவு
சினிமா

எனக்கு அனைத்தையும் கொடுத்த படம் இது.. 'காக்க காக்க' குறித்து சூர்யா பதிவு

Share:

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வெளியான படம் 'காக்க காக்க'. இதில் ஜீவன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் திருப்புமுனை படமாக மாறியிருந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள், வசனங்கள், கதாப்பாத்திரம் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், "எனக்கு அனைத்தும் கொடுத்த படம் இது. அன்புச்செல்வன் கதாப்பத்திரம் எப்பொழுதும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஜோதிகா தான் இந்தப் படம் குறித்து என்னிடம் முதலில் பேசி இருந்தார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சக நடிகர்கள் மற்றும் உடன் பணியாற்றிய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இப்படத்தில் நல்ல பல நினைவுகள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

Related News