Jan 16, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்ட்ரோவின் வசீகரிக்கும் பண்டிகை நிகழ்ச்சிகளுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள்
சினிமா

ஆஸ்ட்ரோவின் வசீகரிக்கும் பண்டிகை நிகழ்ச்சிகளுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.16-

பொங்கலை முன்னிட்டு ஆஸ்ட்ரோ பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் உள்ளூர் பொங்கல் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

நெல் பயிரிடுதல், பாரம்பரிய மல்யுத்தம், பொங்கல் அரிசி தயாரித்தல், தேங்காய் உரித்தல், பூ கட்டுதல், தோரணம் தயாரித்தல் மற்றும் பலப் பாரம்பரிய நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் ஐந்து நகர இளைஞர்களுக்குச் சவால் விடுத்துப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் வேர்களைக் கொண்டாடும் ஒரு வேடிக்கையான ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சி வில்லேஜ் பொங்கல் ரீலோடட் 2.0. ஐந்து கிராமத்துப் பெண்கள் அவர்களுக்கு உதவுவார்கள். மேலும் அவர்கள் மின்னியல் சாதனங்கள் மற்றும் நவீன வசதிகள் இல்லாமல் கிராம வாழ்க்கைக்கு ஏற்ப மாற வேண்டும். உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் ஷஸ்வின் ராஜ் இயக்கியுள்ள இந்த அற்புதமான 5-அத்தியாய ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சியில் யுவன்ராஜ் சுப்ரமணியம், அருண்குமரன், ராஜ் குமார் மணி மாறன், கிறிஸ் ஜெய் ஹரிஷ், பவித்ரன் மோகன், மாதுரி ரசமணி, சாரா ஆன் ஜெயராஜன், பெவினாதேவி பேரலகஹன், நிஷாலினி முருகன், லாவண்யா ஸ்வேதா பன் மற்றும் கிஷோக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஜனவரி 10 இரவு 9.30மணிக்கு வில்லேஜ் பொங்கல் ரீலோடட் 2.0 முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

உள்ளூர் திறமையான ரவீன்தாஸ் இயக்கியத் திகில்-நகைச்சுவைத் தொலைக்காட்சித் திரைப்படமான டு.ரி.மே-இல் ஹம்ஷினி பெருமாள், தர்ஷாமினி கேசவன், சுபஸ்ரீ வைரமுத்து, சங்கபாலன், நவின்ஹோ மற்றும் பலப் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். ஓர் இரக்கமற்றக் கடன்காரரிடமிருந்து அவளைக் காப்பாற்றக்கூடியத் தனது கொள்ளுத் தாத்தா வதந்திப் பரப்பியப் புதையலைக் கண்டறியக் காலத்தை எதிர்த்துப் போராடும் டுர்கா எனும் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இளம் நிர்வாகியைப் இக்கதைப் பின்தொடர்கிறது. அவளுடையத் தேடல் செல்வத்திற்கு வழிவகுக்குமா அல்லது அழிவுக்கு வழிவகுக்குமா? ஜனவரி 17 இரவு 9.30 மணிக்கு முதல் ஒளிபரப்பாகும் டு.ரி.மே-ஐப் பார்த்து மகிழலாம்.

அப்-க்ளோஸ் அண்ட் பர்சனல் வித் ஸ்ரீனிவாஸ் எனும் அற்புதமான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் இடம் பெறுகிறார்.  மின்சாராப் பூவே, முழுமதி, சொட்ட சொட்ட மற்றும் தனதுப் பல ஹிட் பாடல்களை அவர் பாடுகிறார். புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகருடன் இணைந்துப் பாடும் பிரபல உள்ளூர் கலைஞர்களான அருளினி, ஹெமித்ரா, திவ்யா, குமரேஷ் மற்றும் ஸ்ரீ வித்யா ஆகியோரின் அற்புதமானப் படைப்புகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஜனவரி 18 இரவு 9.00 மணிக்கு க்ளோஸ் அண்ட் பர்சனல் வித் ஸ்ரீனிவாஸ் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

இந்த ஆண்டுப் பொங்கலின் உற்சாகத்தை ஆஸ்ட்ரோவின் பொங்கல் கொண்டாட்டம் மேலும் கூட்டுகிறது. டெனெஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், சசி குமார், மூன் நிலா, தாஷா மற்றும் பல உள்ளூர் திறமையாளர்களைச் சந்திக்கும் அறிய வாய்ப்பைப் பெற அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர். ஜனவரி 17, 2026 (சனிக்கிழமை) மதியம் 1 மணி முதல் 3 மணி வரை GM Klang-இல் இந்த நிகழ்வு நடைபெறும்.

Related News