Oct 18, 2025
Thisaigal NewsYouTube
வசூலை குவிக்கும் 'மாமன்னன்' படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
சினிமா

வசூலை குவிக்கும் 'மாமன்னன்' படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Share:

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'மாமன்னன்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசாகியுள்ள இந்தப்படத்திற்கு நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை குவிந்து வருகிறது. இந்நிலையில் 'மாமன்னன்' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் பான் இந்தியா படமாக வெளியான 'தசரா' படத்தில் நானி ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாராட்டுக்களை குவித்தது. இந்நிலையில் தான் தற்போது 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ளார்.

'மாமன்னன்' படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தப்படத்திற்காக 2 கோடி ரூபாய் சம்பளமாக கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகததால், இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

உத்ய்நிதியின் கடைசி படமாக வெளியாகியுள்ள 'மாமன்னன்' படம் உலக நாயகன் கமல், சூப்பர்ஸ்டார் ரஜினி என பலரின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாகவும் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்தப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு 50 லட்சம் மதிப்பிலான காரை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related News