சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இவ்வாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி இருந்த படம் பராசக்தி. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி இருந்தது இந்தப் படத்தின் கதை. இதில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவை இயக்குனர் சுதா கொங்கரா அணுகினாராம். ஆனால் அவர் வேறு படங்களில் பரபரப்பாக இருப்பதால் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்.
அது மட்டுமின்றி ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனையும் சுதா கொங்கரா அணுகினாராம். ஆனால் அவரும் முடியாது என மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.








