ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கியவர் லவ் டுடே, டிராகன், ட்யூட் என படங்கள் நடிக்க எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். மற்ற மொழிகளிலும் வெளியாக அங்கேயும் பிரதீப்பிற்கு ரசிகர்கள் உருவாகினர். இந்த 3 படங்களுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.
அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார். பிப்ரவரியில் படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பிரதீப்பின் அடுத்த படமாக ஏஜிஎஸ் தயாரிப்பில் சயின்ஸ் ஃபிக்சன் படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதீப் ரங்கநாதனே இயக்கி, நடிக்கவுள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌதரி என 2 நாயகிகளும் நடிக்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.








