நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகிறது. அந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், மெகா குடும்பத்தை சேர்ந்த நாகேந்திர பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
ரஜினி படத்தில் எதற்காக இவ்வளவு கூட்டம். தலைவர் படத்தை தாங்க வேறு யாரும் தேவையில்லை, அவரே போதும். இந்த நெல்சன் திலீப்குமார் ஏன் பிற மொழி பிரபலங்களை நடிக்க வைத்திருக்கிறார் என ரசிகர்கள் சிலர் எரிச்சல் அடைந்தார்கள்.
பிற மொழி பிரபலங்களை நடிக்க வைத்தது நெல்சன் திலீப்குமார் ஐடியா இல்லை, ரஜினிகாந்த் ஐடியா ஆகும். இது மல்டி ஸ்டாரர்களின் காலம். காலத்திற்கேற்ப மாற வேண்டும். அப்பொழுது தான் ஜெயிக்க முடியும் என நெல்சன் திலீப்குமாரிடம் கூறியதே ரஜினி தானாம்.
மோகன்லாலுக்காக கேரளா ரசிகர்களும், சிவராஜ்குமாருக்காக கன்னட ரசிகர்களும், ஜாக்கி ஷ்ராஃபுக்காக இந்தி ரசிகர்களும், நாகேந்திர பாபுவுக்காக தெலுங்கு ரசிகர்களும் ஜெயிலர் படம் பார்க்க வருவார்கள் என்பதே ரஜினியின் கணக்காம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை பார்த்த பிறகே மல்டி ஸ்டாரர் பக்கம் ரஜினியின் கவனம் சென்றிருக்கிறது. தான் மட்டுமே படத்தை தோளில் தாங்க வேண்டியது இல்லை. உதவிக்கு ஆட்களை அழைப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறாராம் ரஜினி.