Jan 18, 2026
Thisaigal NewsYouTube
அல்லு அர்ஜுன் படத்தை இயக்கச் சென்று விட்ட லோகேஷ்
சினிமா

அல்லு அர்ஜுன் படத்தை இயக்கச் சென்று விட்ட லோகேஷ்

Share:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்திற்குப் பிறகு கைதி 2 படத்தைத் தான் இயக்க போகிறார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்குக் கதை சொல்லி, அடுத்த படத்தை அவருடன் உறுதிச் செய்து விட்டதை.

அண்மையில் லோகேஷ் மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் AA27 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ உடன் வந்திருந்தது.

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் படம் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கும் பல்வேறு தியேட்டர்களுக்கு கார்த்தி நேரில் சென்று வருகிறார்.

அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் "லோகேஷ் அல்லு அர்ஜுன் படத்தை எடுக்கப்பட்டு சென்று விட்டார். கைதி 2 நிலை என்ன?" என கேள்வி எழுப்பினார்கள். “அதை லோகேஷ் கனகராஜே சொல்வார்" என ஒரே வரியில் பதில் கூறியுள்ளாராம் கார்த்தி.  

Related News