Jan 19, 2026
Thisaigal NewsYouTube
தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணமா? மிருணாள் தரப்பில் வெளிவந்த உண்மை
சினிமா

தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணமா? மிருணாள் தரப்பில் வெளிவந்த உண்மை

Share:

நடிகர் தனுஷ் - நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் சில வதந்திகள் பரவின. ஆனால், அது உண்மையில்லை என பின்பு தெரிய வந்தது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தனுஷ் - மிருணாள் தாகூர் வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக பாலிவுட் வட்டாரத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தி பேசினார்கள்.

ஆனால், தனுஷ் தரப்பில் இருந்தோ, அல்லது மிருணாள் தாகூர் தரப்பில் இருந்தோ எந்த ஓர் அறிவிப்பும் திருமணம் குறித்து வெளி வரவில்லை.

இந்த நிலையில், தனுஷுக்கும் மிருணாள் தாகூருக்கும் திருமணம் என பரவி வந்த தகவலை நடிகை மிருணாள் தாகூர் தரப்பு நிராகரித்துள்ளது. அது எதுவும் உண்மையான தகவல் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம் குறித்து வெளி வந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி எனத் தெரிய வந்துள்ளது.  

Related News