Jan 20, 2026
Thisaigal NewsYouTube
ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கான் மோதல்.. நடிகை ராஷ்மிகா சொன்ன தகவல்
சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கான் மோதல்.. நடிகை ராஷ்மிகா சொன்ன தகவல்

Share:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் முன்னணி இயக்குனர். அவர் ஹிந்தியில் இரண்டு ஹிட் படங்கள் இயக்கி உள்ளார். 2008ல் கஜினி, 2014ல் துப்பாக்கி படத்தின் கதையை ஹிந்தியில் ரீமேக் செய்தார் அவர்.

அதன் பிறகு கடந்த ஆண்டு சல்மான் கான் - முருகதாஸ் கூட்டணியில் சிக்கந்தர் என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் அந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. அது பற்றி ஒரு பேட்டியில் பேசிய முருகதாஸ் சல்மான் பற்றி சில குற்றச்சாட்டுகளைக் கூறினார். சல்மான் கான் நேரத்திற்கு ஷூட்டிங் வருவதில்லை என அவர் தெரிவித்தார். மேலும் மொழி தெரியாமல் படம் எடுப்பது பற்றியும் அவர் பேசி இருந்தார்.

அதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பதிலடி கொடுத்த சல்மான் கான், 'முருகதாஸின் அடுத்த படம் மதராஸி ஷூட்டிங்கிற்கு ஹீரோ நேரத்திற்கு வந்தாலும் அது பெரிய பிளாப் ஆகி இருக்கிறதே' எனத் தாக்கிப் பேசி இருந்தார்.

இந்நிலையில் சிக்கந்தர் படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா அளித்த பேட்டியில் முருகதாஸ் தன்னிடம் ஆரம்பத்தில் சொன்னான் கதை வேறு விதமாக இருந்தது, ஆனால் எடுக்கும் போது அது அப்படியே மாறி இருந்தது என தெரிவித்து இருக்கிறார்.

சல்மான் கான் தலையீடு தான் இதற்கெல்லாம் காரணமா என ரசிகர்கள் தற்போது பரபரப்பாகப் பேசத் தொடங்கி இருக்கின்றனர். சிக்கந்தர் படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்கிற விவாதமும் தற்போது மீண்டும் வெடித்து இருக்கிறது. 

Related News