நடிகர் விஜய்யின் முக்கிய படங்களில் ஒன்று பகவதி. அந்த படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் நடித்து இருப்பார். அவருக்கு ஒரு பெரிய அடையாளத்தையே அந்தப் படம் உருவாக்கிக் கொடுத்தது.
ஆனால் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க தனுஷை தான் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அணுகினாராம். ஆனால் அவர் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம். துள்ளுவதோ இளமை வெளியாகி இருந்த நேரத்தில் தான் பகவதி பட வாய்ப்பு தனுஷைத் தேடிச் சென்றிருக்கிறது.
தனுஷ் “தம்பி ரோல் தனக்கு செட் ஆகாது” என வெளிப்படையாகவே கூறி விட்டசாராம். இயக்குனர் சில அம்சங்களைச் சுட்டிக் காட்டியும், அதெல்லாம் தேவையில்லை, காதல் கொண்டேன் படம் வந்தாலே அது எனக்கு நடக்கும் என கூறினாராம் தனுஷ்.
இந்த விஷயத்தை இயக்குனர் ஏ.வெங்கடேஷ் பேட்டியொன்றில் கூறி இருக்கிறார்.








