தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக 'கேப்டன் மில்லர்' படம் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதன் படபிடிப்பு மும்முரமாக நடந்து வந்த நிலையில் தனுஷின் அடுத்த படம் குறித்த வேலைகள் துவ்ங்கவிட்டது. இந்நிலையில் தனுஷ் டி50 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மிழ் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் ஒரு படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். ராஜ்கிரண் நடிப்பில் வெளியான இந்தப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியுள்ளார் தனுஷ்.
அதன்படி தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு 'ராயன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எஸ்.ஜே. சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஸ்ரா விஜயன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசயமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டி50 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக கொல மாஸான போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மொட்டை தலையுடன் மிரட்டலான தனுஷ் நிற்கும் இந்த புதிய போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அத்துடன் இந்தப்படம் வடசென்னை பின்னணியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
'கேப்டன் மில்லர்' படத்திற்காக நீண்ட தாடி, தலைமுடி என வெறித்தனமான லுக்கில் வலம் வந்த தனுஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மொட்டையடித்தார். இந்நிலையில் அதே லுக்கில் தற்போது டி50போஸ்டர் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் டைரக்ஷனுக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.